முகப்பு
செய்திகள்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டெல் போட்ரோ காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
முன்னதாக தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராபின் ஹாஸியை எதிர்கொண்ட டெல் போட்ரோ அதில் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிற்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
அதேபோல், செர்பியாவின் ஃபிலிப் கிராஜினோவிச் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் நிகோலஸ் மஹட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதனிடையே, 3-ஆவது சுற்று ஒன்றில் போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெரிமி சார்டியை வீழ்த்தினார்.
இதர 3-ஆவது சுற்றுகளில் குரோஷியாவின் மரின் சிலிச் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான போர்னா கோரிச்சை வீழ்த்தினார். பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மனாரினோவை வென்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →