முகப்பு
செய்திகள்

இந்தியா-நியூசி., இடையேயான மூன்றாவது டி20 போட்டி: மழையால் தாமதம்! 

இந்தியா-நியூசிலாந்து அணிகளை இடையே திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த டி20    கிரிக்கெட் போட்டி துவங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 நவம்பர், 2017 at 7:04 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:34 PM

திருவனந்தபுரம்: இந்தியா-நியூசிலாந்து அணிகளை இடையே திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த டி20    கிரிக்கெட் போட்டி துவங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. தில்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் சாம்பியன் யார் என்பதனை தீர்மானிக்கப் போகும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது.

Advertisement

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவது தாமதம் ஆகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.