செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: கோலி தொடர்ந்து முதலிடம்

DIN

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், கோலி மொத்தம் 104 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 13 புள்ளிகள் அதிகம் பெற்ற அவர், டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டார். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் 2-ஆவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 21-ஆவது இடத்தையும், ஷிகர் தவன் 20 இடங்கள் முன்னேறி 45-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
தரவரிசையில், நியூஸிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் காலின் மன்ரோ 12-ஆவது இடத்தைப் பிடித்தார்.
முதலிடத்தில் பூம்ரா நீடிப்பு: ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்ப்ரீத் பூம்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 2 இடங்கள் முன்னேறி 26 -ஆவது இடத்தைப் பிடித்தார். 
சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திரே சாஹல் 22 இடங்கள் முன்னேறி 30 -ஆவது இடத்தையும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 17 இடங்கள் முன்னேறி 62-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
முதலிடத்துக்குச் சென்ற பாகிஸ்தான்: இந்தியாவிடம் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்ததை அடுத்து, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து அணி 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்தத் தொடர் வெற்றி மூலம் இந்தியா 3 புள்ளிகள் பெற்று, 5-ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. மேற்கு இந்திய தீவுகள் அணி 3-ஆவது இடத்திலும், இங்கிலாந்து 4-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT