முகப்பு
செய்திகள்

ஒலிம்பிக்கில் 48 கிலோ பிரிவு சேர்க்கப்பட்டால் சாதகம்

ஒலிம்பிக் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவு சேர்க்கப்பட்டால் தனக்கு அது சாதகமானதாக இருக்கும் என்றும், தான் அதில் சிறப்பாக செயல்பட இயலும் என்றும் இந்திய குத்துச்சண்டை

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

ஒலிம்பிக் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவு சேர்க்கப்பட்டால் தனக்கு அது சாதகமானதாக இருக்கும் என்றும், தான் அதில் சிறப்பாக செயல்பட இயலும் என்றும் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறினார்.
வியத்நாமில் அண்மையில் நிறைவடைந்த மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். நாடு திரும்பிய அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
நான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, முழு உடல்தகுதியுடன் இருக்கும் வரையில் என்னால் யாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதே உடல்தகுதியுடன் நீடித்தால் எவராலும் என்னை வெல்ல இயலாது.
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவை புதிதாக சேர்த்தால், அதில் என்னால் சிறப்பாக செயல்பட இயலும். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு. உண்மையில் பிரபலமான வீராங்கனையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் எப்போதும் கவனமாகவே செயல்படுகிறேன். அது ஒரு நெருக்கடி என நான் கருதவில்லை என்றார் மேரி கோம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →