செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் 530-க்கு டிக்ளேர்

தினமணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒடிஸாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 165 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 530 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
 இரு அணிகளுக்கும் இடையே வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தொடங்கிய தமிழகம், முதல்நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாள் ஆட்டத்தை இந்திரஜித் 41, விஜய் சங்கர் 8 ரன்களுடன் தொடங்கினர்.
 இதில் இந்திரஜித் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களம் கண்டார் அபராஜித். அவரும், விஜய் சங்கரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில், 183 பந்துகளுக்கு 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்திருந்த விஜய் சங்கர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
 தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களுக்கு வீழ்ந்தார். இதனிடையே, அபராஜித் சதம் கடக்க, மறுமுனையில் மகேஷ் ரன்கள் இன்றியும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 10 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் தமிழகம் 165 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 530 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் அபினவ் முகுந்த் அறிவித்தார். அபராஜித் 230 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 109 ரன்களுடனும், ரஹீல் ஷா 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒடிஸா தரப்பில் சூரியகாந்த் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
 ஒடிஸா-36: இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஒடிஸா அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. சந்தீப் பட்நாயக் 15, நட்ராஜ் பெஹெரா 17 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT