முகப்பு
செய்திகள்

ஹாங்காங் ஓபன் இறுதிப்போட்டியில் நுழைந்தார் பி.வி.சிந்து

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினார். 

Updated On : 25 நவம்பர், 2017 at 8:11 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:42 PM

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிச்சுற்றுப் போட்டிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தகுதிபெற்றார்.

முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டான் பலப்பரீட்சை நடத்தினர்.

இருப்பினும் இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 43 நிமிடங்களில் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Advertisement

இந்நிலையில், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனை தாய் த்ஸு யிங்கை எதிர்கொள்கிறார்.

இப்போட்டித்தொடரில் இந்தியாவின் இதர வீரர்கள் வெளியேற, கோப்பையை வெல்ல ஒரே எதிர்பார்ப்பாக சிந்து மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.