முகப்பு
செய்திகள்

5-ஆவது ஒருநாள்: 243 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா!

நாக்பூரில் நடக்கும் 5-ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 242 ரன்கள் எடுத்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. பின்னர் நடந்த 4-ஆவது ஒருநாள் போ்டடியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய் அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது.

டேவிட் வார்னர் 53, ஸ்டாய்னிஸ் 46, டிராவிஸ் ஹெட் 42, ஆரோன் பிஞ்ச் 32 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் அக்ஸர் படேல் 3, பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →