செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

DIN

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடியது. அதனால் இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு வங்கதேசத்தை சந்திக்கிறது. அதேநேரத்தில் வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் 0-7 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் படுதோல்வி கண்ட நிலையில், இந்தியாவை எதிர்கொள்கிறது. 
வங்கதேசத்தோடு ஒப்பிடுகையில் இந்திய அணி மிக வலுவாக உள்ளது. எஸ்.வி.சுநீல், லலித் உபத்யாய், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், ஹர்மான்பிரீத் சிங் போன்ற வலுவான வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT