இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் ஆட்டம் வரும் 22-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து 2-ஆவது ஆட்டம் 25-ஆம் தேதி புணேவிலும், 3-ஆவது ஆட்டம் 29-ஆம் தேதி கான்பூரிலும் நடைபெறுகின்றன. இத்தொடரில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.
இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாக 2 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி விளையாடவுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி முதல் பயிற்சி ஆட்டமும், அக்டோபர் 19-ம் தேதி 2-ஆவது பயிற்சி ஆட்டமும் நடைபெறுகிறது. இப்போட்டிகள் மும்பையிலுள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த 2 பயிற்சிப் போட்டிகளிலும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் 13 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதற்கு தில்லியைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாரிய லெவன் அணி விவரம்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், குர்க்ரீத் மான், ப்ரித்வீ ஷா, ஷிவம் சௌத்ரி, மிலிந்த் குமார், ஷபாஸ் நதீம், கரண் ஷர்மா, தாவல் குல்கர்னி, ஜயதேவ் உனாட்கட், அவேஸ் கான்.