செய்திகள்

ஐரோப்பா ஓபன்: சரண்-லிப்ஸ்கி ஜோடி சாம்பியன்

DIN

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய வீரரான திவிஜ் சரண் 2017-ஆம் ஆண்டில் ஏடிபி போட்டியில் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். அதேவேளையில் இது ஒட்டுமொத்தமாக அவரது மூன்றாவது பட்டமாகும்.
முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் சரண்-லிப்ஸ்கி ஜோடி 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸால்ஸ்- சிலியின் ஜூலியோ பெரால்டா இணையை வீழ்த்தியது.
வெற்றிக்குப் பிறகு திவிஜ் சரண் கூறுகையில், "இந்த ஆண்டின் இறுதியில் ஏடிபி போட்டியில் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரு மாதங்கள் கடினமானதாக இருந்தது. எனக்கான வெவ்வேறு இணையுடன் விளையாடினேன். எனது விளையாட்டை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் இருந்தது.
லிப்ஸ்கியும், நானும் சிறந்த இணையாக மேம்பட்டுள்ளோம். இந்தப் போட்டியுடன் லிப்ஸ்கி நாடு திரும்புகிறார். நான் அடுத்து நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது' என்றார்.
இதையடுத்து, பிரான்சில் நகரில் நடைபெறும் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஸ்காட் கிளேடனுடன் இணைந்து விளையாடும் திவிஜ் சரண், அதைத் தொடர்ந்து நவம்பரில் புணே மற்றும் பெங்களூரில் நடைபெறும் சேலஞ்சர் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT