செய்திகள்

3-ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதல் பேட்டிங்

3-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Raghavendran

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டு, தொடரை கைப்பற்ற இரு அணிகளுமே கடுமையாக போட்டியிட உள்ளன.

இந்தத் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், அது இந்தியா தொடர்ச்சியாக வென்ற 7-ஆவது ஒருநாள் தொடராக இருக்கும்.

நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில், வெற்றியுடன் தொடங்கி தற்போது தோல்வியில் நிற்கிறது. எனவே, கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டு தொடரைக் கைப்பற்ற அந்த அணி ஆக்ரோஷத்துடன் செயல்படும். 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பூம்ரா, புவனேஸ்வர் குமார்.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்டில், காலின் மன்ரோ, ராஸ் டெய்லர், டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சேன்ட்னர், ஆடம் மில்னே,  டிம் சௌதி, டிரென்ட் போல்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT