செய்திகள்

உலகக் கோப்பை செஸ்: ஆனந்த் பங்கேற்பு

DIN

ஜார்ஜியாவில் நடைபெறவுள்ள ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்கிறார்.

5 முறை உலக சாம்பியனான ஆனந்த், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்பதன் மூலம், 2018-ஆம் ஆண்டு கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆனந்த் தலைமையில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
முன்னதாக, சீனா (2000) மற்றும் ஹைதராபாதில் (2002) நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் ஆனந்த் பங்கேற்றிருந்தார். எனினும், 2007-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு அவர் அதில் விளையாடவில்லை.
இந்த உலகக் கோப்பையில் ஆனந்த், தனது முதல் சுற்றில் மலேசியாவின் யோ லி டியானை எதிர்கொள்கிறார். அதில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் வருஸான் அகோபியானை 2-ஆவது சுற்றிலும், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ûஸ 3-ஆவது சுற்றிலும், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை அதற்கு அடுத்த சுற்றிலும் சந்திப்பார்.
இப்போட்டியில் ஆனந்த் தவிர, கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜராத்தி, பாஸ்கரன் அதிபன், தீப் சென்குப்தா, சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT