செய்திகள்

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்த கோலி, 4-ம் இடத்துக்கு முன்னேறிய பும்ரா!

DIN

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் 5-0 என இந்தியா அபார வெற்றியுடன் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தரவரிசைகளை வெளியிட்டது.

இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்தார். மொத்தம் 887 புள்ளிகள் பெற்று சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் சமன் செய்தார். அதுபோல டி20 தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறார். 

ஒருநாள் தரவரிசையில் ரோஹித் சர்மா 9-வது இடத்தையும், தோனி 10-ஆவது இடத்தையும் பிடித்தனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா 27 இடங்கள் முன்னேறி 4-ஆம் இடத்தைப் பிடித்தார். அக்ஷர் படேல் 10-வது இடத்துக்கு முன்னேறினார்.

ஹார்திக் பாண்டியா 61-ஆவது இடத்திலும், குல்தீப் யாதவ் 21 இடங்கள் முன்னேறி 89-ஆவது இடத்தையும், சாஹல் 55 இடங்கள் முன்னேறி 99-வது இடத்தையும் பிடித்தனர்.

அணிகளுக்கான தரவரிசையில் 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா 3-ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

இந்தத் தொடரின் படுதோல்வி காரணமாக வருகிற 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நேரடித் தேர்வு பெறும் வாய்ப்பில் இருந்து இலங்கை விலகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT