செய்திகள்

அமெரிக்க ஓபன்: நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

எழில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர், தென் ஆப்பிரிக்காவின் ஆண்டர்சனைச் சந்திக்கிறார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபனின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் உலகின் முதல் நிலை வீரரான நடால், 24-வது இடத்தில் இருக்கும் டெல் போட்ரோவைச் சந்தித்தார். 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டெல் போட்ரோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நடால்.

டெல் போட்ரோவை இதுவரை 14 முறை சந்தித்துள்ள நடால், அதில் 9 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். 

மற்றொரு அரையிறுதிச் சுற்றில், போட்டித் தரவரிசையில் 32-வது இடத்தில் இருக்கும்  தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், கெரனோ பஸ்டாவைச் சந்தித்தார்.  4-6, 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்டர்சன் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். தரவரிசை நிர்ணயிக்கப்பட்ட 1973-க்குப் பிறகு அமெரிக்க ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடும் குறைந்த தரவரிசை கொண்ட வீரர் ஆண்டர்சன் ஆவார். இதற்கு முன்பு நடாலுடன் நான்கு முறை மோதி நான்கிலும் தோல்வி கண்டுள்ளார். எனவே இம்முறை அமெரிக்க ஓபன் போட்டியை நடால் வெல்ல அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இது, 2017-ல் நடால் பங்குபெறும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியாகும். ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் ஃபெடரரிடம் வீழ்ந்தார் நடால். அதன்பின்னர் ஜுனில் பிரெஞ்சு ஓபனைக் கைப்பற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT