செய்திகள்

சென்னை பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான பேட்டிங்!

ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்...

எழில்

ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிகள் மோதும் ஒரு நாள் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு இந்த பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. 

இந்த ஆட்டத்தைக் காண சி, டி, இ கேலரிகளின் கீழ் பகுதிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எவ்விதக் கட்டணமும் கிடையாது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தப் போட்டி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. டேவிட் வார்னர் 64, ஸ்டீவன் ஸ்மித் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். டிராவிஸ் ஹெட்டும் அரை சதம் எடுத்தார். அவர் 65 ரன்களில் வீழ்ந்தார். ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இன்றைய பந்துவீச்சாளர்களில் அவர்தான் சிறப்பாகப் பந்துவீசி ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார். 

40 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5  விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT