செய்திகள்

உலக லெவன் அணிக்கு எதிரான டி20: பாகிஸ்தான் வெற்றி!

DIN

உலக லெவன் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் முயற்சியாக பாகிஸ்தான் மற்றும் உலக லெவன் அணிகளிடையே 3 டி20 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

லாகூரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற உலக லெவன் அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான் 8 ரன்களில் வெளியேற, அஹமது ஷெஸாத்துடன் இணைந்தார் பாபர் ஆஸம். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 13.3 ஓவர்களில் 122 ரன்கள் குவித்தது. அஹமது ஷெஸாத் 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். பாபர் ஆஸம் 52 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசிக் கட்டத்தில் ஷோயிப் மாலிக் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து வெளியேற, இமாத் வாசிம் 4 பந்துகளில் 15 ரன்களை விளாசினார். இதனால் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய உலக லெவன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. உலக லெவன் தரப்பில் ஒருவரால் கூட 30 ரன்களைக் கடக்க முடியவில்லை. டூபிளெஸ்ஸிஸ், சாமி ஆகியோர் அதிகபட்சமாக தலா 29 ரன்கள் எடுத்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT