செய்திகள்

சிங்கப்பூர் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு (வீடியோ)

எழில்

சிங்கப்பூர் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வம்சாவழி வீரர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் குத்துச் சண்டையில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 32 வயது தமிழரான பிரதீப் சுப்ரமணியன் 42 வயது பிரபல வீரர் ஸ்டீவன் லிம்முடன் மோதினார். லிமுக்கு எதிராக சில்வெஸ்டர் சிம் முதலில் மோதுவதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் போட்டியிலிருந்து விலகியதால் டபிள்யூபிபிஎஃப் அமைப்பின் தலைவரான (World Bodybuilding and Physique Sports Federation ) பிரதீப் சுப்ரமணியன் இப்போட்டியில் பங்கேற்றார்.

இந்நிலையில் பிரதீப் - லிம் இடையேயான போட்டி தொடங்கிய 5 நிமிடத்தில் பிரதீப்பின் மூக்கி ரத்தம் வழிந்ததால் போட்டியை நிறுத்தினார் நடுவர். இதன்பின் புள்ளிகளின் அடிப்படையில் லிம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

தலையில் பல குத்துகளை வாங்கிய பிரதீப் போட்டி முடியும்வரை சுயநினைவுடன் இருந்துள்ளார். இதன்பின்னர் அவர் மயக்கமடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் பரிதாபமாக மரணமடைந்தார். பிரதீப் சுப்ரமணியனின் மரணத்துக்குக் குத்துச்சண்டை வீரர் ஸ்டீவன் லிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT