முகப்பு
செய்திகள்

60 ரன்களில் சுருண்ட மேற்கிந்தியத் தீவுகள்: அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:38 PM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.

கராச்சியில் நேற்று நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ஒருவர் கூட அரை சதமெடுக்கவில்லையென்றாலும் ஃபகார் ஜமான் 39, ஹுசைன் தலத் 41, சர்ஃபராஸ் அகமது 38, சோயிப் மாலிக் 37 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி 200 ரன்கள் தாண்ட உதவினார்கள். 

கடினமான இலக்கை எதிர்கொண்ட மே.இ. அணி 13.4 ஓவர்களில் 60 ரன்களுக்குச் சுருண்டது. சாமுவேல்ஸ் மட்டும் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். நவாஸ், ஆமிர், சோய்ப் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதனால் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.