செய்திகள்

மது குடும்பத்துக்கு வீரேந்திர சேவாக் ரூ. 1.5 லட்சம் நிதியுதவி

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏ.மது (27) குடும்பத்துக்கு வீரேந்திர சேவாக் 1.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.

Raghavendran

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி, கடுகுமன்னா பகுதியைச் சேர்ந்தவர் ஏ.மது (27). பழங்குடியினத்தைச் சேர்ந்த மதுவை, அரிசி திருடியதாக குற்றம்சாட்டி கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி உள்ளூர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்துக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்துக்கும் நிதியுதவி அளித்துள்ளார். வீரேந்திர சேவாக் அறக்கட்டளை மூலமாக மதுவின் தாயாருக்கு ரூ. 1.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். 

இதை சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் இந்த காசோலையை வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி மதுவின் தாயாரை நேரில் சந்தித்து வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT