19 பதக்கங்களுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா
காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
கடந்த 5-ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின. இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். போட்டிகளில் 5-வது நாளான திங்கள்கிழமை 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களுடன் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியா 38 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலத்துடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 22 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கனடா, ஸ்காட்லாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாம் இடங்களை வகிக்கின்றன.