முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம்!

காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான டபுள் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் அன்குர் மிட்டல் வெண்கலம் வென்றுள்ளார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:43 PM
பகிர்:

காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான டபுள் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் அன்குர் மிட்டல் வெண்கலம் வென்றுள்ளார். 

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். பதக்கப் பட்டியலில் ஏற்கெனவே இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் போட்டியின் 7-வது நாளான இன்று, துப்பாக்கி சுடுதலில் இந்திய அணிக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்று அசத்தினார். இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள 12-வது தங்கமாகும்.

இதற்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான டபுள் டிராப் பிரிவில் அன்குர் மிட்டல் வெண்கலம் வென்றுள்ளார்.

பதக்கப்பட்டியலில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாம் இடம் வகிக்கிறது. இதுவரை 12 தங்கம் 4 வெள்ளி 8 வெண்கலம் என மொத்தமாக 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.