செய்திகள்

காமன்வெல்த் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு வெள்ளி!

இந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய அணிக்குக் கிடைக்கும் 11-வது பதக்கமாகும் இது...

எழில்

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் 50 மீ. ரைபிள் ப்ரோனில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

இந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய அணிக்குக் கிடைக்கும் 11-வது பதக்கமாகும் இது. இதில் மட்டும் இந்திய அணி 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என ஏராளமான பதக்கங்களை அள்ளி அசத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT