செய்திகள்

ஆடவர் ஹாக்கி அணி தேசிய பயிற்சி முகாமுக்கு 55 வீரர்கள் தேர்வு

தினமணி

ஆடவர் ஹாக்கி அணி தேசிய பயிற்சி முகாமுக்கு மொத்தம் 55 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 ஹாக்கி இந்தியா சார்பில் பெங்களூரு சாய் பயிற்சி மையத்தில் தேசிய பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கு முன்னாள் கேப்டன் சர்தார் சிங் உள்பட 55 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 அண்மையில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சர்தார் சிங் அணியில் இடம்பெறவில்லை. பதக்கம் எதுவும் வெல்லாமல் 4-வது இடத்தையே இந்திய ஆடவர் அணி பெற்றிருந்தது. ரமன்தீப் சிங், சுரேந்தர் குமார், பீரேந்திர லக்ரா, திப்சன் டிர்கி, நீலம் சஞ்சீவ், ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களும் தேசிய முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர். தலைமைப் பயிற்சியாளர் மார்ஜின் கூறியதாவது: காமன்வெல்த் போட்டியில் ஏற்பட்ட தோல்வி பல்வேறு பாடங்களை கற்பித்துள்ளது. வருங்காலத்தில் அணியை தயார் செய்ய அவை பெரிதும் உதவும். குறிப்பிட்ட அம்சங்களில் அணியின் திறனை மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT