முகப்பு
செய்திகள்

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்த இந்திய யு-20 கால்பந்து அணி!

இந்தியக் கால்பந்து குறித்து எதிர்மறையான செய்திகளே வெளிவந்துகொண்டிருந்தன. இந்நிலையில் வலுவான ஆர்ஜென்டீனாவின் யு-20 அணியை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

இந்தியக் கால்பந்துப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் இந்திய யு-17 அணி மீதான பரபரப்பு குறித்து விமரிசனம் செய்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியக் கால்பந்து அணி கலந்துகொள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் தடை விதித்துள்ளது.

இப்படிக் கடந்த சில நாள்களாக இந்தியக் கால்பந்து குறித்து எதிர்மறையான செய்திகளே வெளிவந்துகொண்டிருந்தன. இந்நிலையில் வலுவான ஆர்ஜென்டீனாவின் யு-20 அணியை வீழ்த்தியுள்ளது இந்திய யு-20 அணி. 

ஸ்பெயினின் வேலன்சியாவில்  நடைபெற்று வரும் கோடிஃப் கோப்பைக்கான (COTIF Cup) போட்டியில் ஆர்ஜென்டீனாவை எதிர்கொண்டது இந்திய யு-20 அணி. யு-20 உலகக் கோப்பையை 6 முறை வென்ற ஆர்ஜென்டீனா அணியை ஃபிளாய்ட் பிண்டோவின் பயிற்சியின் கீழ் விளையாடி வரும் இந்திய அணி, 2-1 என்கிற கோல் கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. 4-வது நிமிடத்தில் தீபக் டங்க்ரியும் 68-வது நிமிடத்தில் அன்வர் அலியும் கோலடித்து அசத்தினார்கள். 

Advertisement

1984 முதல் நடைபெற்று வரும் கோடிஃப் கால்பந்துப் போட்டியில் 2016 முதல் தேசிய அளவிலான இளைஞர்கள் அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments