மீண்டும் அரை சதம்: இங்கிலாந்து டி20 லீக் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய வீராங்கனை மந்தனா!
48, 37, 52*, 43*, 102 & 56 என முதல் ஆறு ஆட்டங்களில் அற்புதமாக விளையாடி, ரன்களைக் குவித்துள்ளார்...
சிலநாள்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கியா சூப்பர் லீக் (வுமன்ஸ் கிரிக்கெட் லீக்) போட்டியில் அதிவேக அரை சதமெடுத்தவர் என்கிற பெருமையைப் பெற்றார் இந்திய வீராங்கனை மந்தனா. பிறகு அசத்தலான சதமெடுத்து மீண்டும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் யார்க்ஷையர் டையமண்ட்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஸ்டார்மைச் சேர்ந்த மந்தனா அரை சதமெடுத்தார். முதலில் விளையாடிய யார்க்ஷையர், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை 19.2 ஓவர்களில் எட்டியது வெஸ்டர்ன் ஸ்டார்ம்ஸ். மந்தனா அதிகபட்சமாக 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அசத்தினார்.
கடந்த வருடப் போட்டியை வென்ற வெஸ்டர்ன் ஸ்டார்ம்ஸ், இந்த வருடம் 22 வயது இந்திய வீராங்கனை மந்தனாவை ஒப்பந்தம் செய்தது. 48, 37, 52*, 43*, 102 & 56 என முதல் ஆறு ஆட்டங்களில் அற்புதமாக விளையாடி, ரன்களைக் குவித்துள்ளார் மந்தனா. இதையடுத்து இந்தப் போட்டியின் கடந்த 3 வருட வரலாற்றில், அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மந்தனா.
Advertisement
கியா சூப்பர் லீக் போட்டி - அதிக ரன்கள்
2016: ஸ்டாஃபானி டெய்லர் (ஸ்டார்ம்) - 289 ரன்கள்
2017: ரேச்சல் பிரீஸ்ட் (ஸ்டார்ம்) - 261 ரன்கள்
2018: மந்தனா (ஸ்டார்ம்) - 338*
கியா சூப்பர் லீக் போட்டி - 2018
அதிக ரன்கள் - மந்தனா (338 ரன்கள்)
அதிக சராசரி - மந்தனா (84.50)
அதிக ஸ்டிரைக் ரேட் - மந்தனா (183.69)
அதிக அரை சதங்கள் - மந்தனா ( 3 அரை சதங்கள்)
தனிநபர் அதிக ரன்கள் - மந்தனா (61 பந்துகளில் 102 ரன்கள், இந்த வருடம் இப்போட்டியில் மந்தனா மட்டுமே சதமடித்துள்ளார்.)
அதிக பவுண்டரிகள் & அதிக சிக்ஸர்கள் - மந்தனா (34 பவுண்டரிகள் & 19 சிக்ஸர்கள்)