முகப்பு
செய்திகள்

உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம்: 3-வது டெஸ்டில் விளையாடவுள்ளார் பூம்ரா!

அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தின் போது பூம்ராவுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டாம் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9-ம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தின் போது பூம்ராவுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர், ஒருநாள் தொடரில் மட்டுமல்லாமல் முதல் இரு டெஸ்டுகளிலிருந்தும் விலகினார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கேற்ற உடற்தகுதியை பூம்ரா அடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் மூன்றாவது டெஸ்டில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments