செய்திகள்

காலமானார் அஜித் வடேகர் 

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜித் வடேகர் (77), உடல்நலக் குறைவால் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புதன்கிழமை காலமானார்.
கடந்த 1958-59 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்த அஜித் வடேகர், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் 1966-67 காலகட்டத்தில் இடம்பிடித்தார். 1966-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார்.
இந்தியாவுக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வடேகர், 2,113 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி, 73 ரன்கள் எடுத்தார்.
இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1971-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT