செய்திகள்

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள்: தொடரும் கோலியின் ‘விநோத’ சாதனை!

எழில்

2014-ல் லார்ட்ஸ் டெஸ்டை இந்திய அணி வென்றது. அப்போது முதல் டெஸ்ட் நடைபெற்ற டிரெண்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற அதே அணியே லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெற்றது. ஆனால் அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்தது. இஷாந்த் சர்மா, பின்னிக்குப் பதிலாக பங்கஜ் சிங், ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றார்கள். அன்று ஆரம்பித்த அணி மாற்றம் இன்று வரை தொடர்கிறது.

இன்று தொடங்கியுள்ள நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முரளி விஜய், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவுக்குப் பதிலாக ஷிகர் தவன், ரிஷப் பந்த், பூம்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2014 லார்ட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு இன்றைய டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் வரை தொடர்ந்து 45-வது டெஸ்டுகளாக இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தோனி, கோலி, ரஹானே ஆகியோர் இந்திய அணியின் கேப்டன்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.

அதிலும் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய அனைத்து டெஸ்டுகளிலும் குறைந்தது ஒரு மாற்றமாவது நிகழ்ந்துள்ளது. இது கோலி தலைமையேற்றுள்ள 38-வது டெஸ்ட். அவர் தலைமையில் தொடர்ச்சியாக இரு டெஸ்டுகளில் ஒரே அணி இதுவரை விளையாடியதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT