செய்திகள்

ஆசியப் போட்டி 2018: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 வெள்ளி

DIN

தீபக்குமார், லக்ஷய் ஷெரோன் வென்றனர்
ஜகார்த்தா ஆசியப் போட்டியில் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தீபக்குமார். அவரைத் தொடர்ந்து ஆடவர் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் லக்ஷய் ஷெரோன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
18-ஆவது ஆசியப் போட்டிகள் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. முதல் நாளான திங்கள்கிழமை துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி ரைபிள் பிரிவில் இந்திய இணை அபூர்வி சந்தேலா-ரவிக்குமார் இணை போட்டியின் முதல் பதக்கமாக வெண்கலத்தை வென்றது. அதைத் தொடர்ந்து மல்யுத்தம் ஆடவர் 65 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா முதல் தங்கப் பத்கத்தை வென்றார். முதல் நாள் பதக்கப்பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சுடுதல் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் 10-க்கு 9 ஷாட்களுடன் 247.7 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனா இதில் தங்கம் வென்றது.ரவிக்குமார் 4-ஆம் இடம் பெற்று வெளியேறினார். 
அதே போல் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா 9.8 புள்ளிகள் மட்டுமே எடுத்து 5-ஆம் இடம் பெற்றதால் தோல்வியுற்று வெளியேறினார். இவர் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஆடவர் ட்ராப் துப்பாக்கி சுடுததில் 45-க்கு 35 ஷாட்கள் என்ற அடிப்படையில் லக்ஷய் ஷெரோன் இரண்டாம் இடத்துடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 
துப்பாக்கி சுடுதலில் 2 வெள்ளி, 1 வெண்கலத்துடன் மொத்தம் 3 பதக்கங்கள் கிட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT