செய்திகள்

அன்மோல்ப்ரீத் சிங், கெளல் அபாரம்: 3-0 என நியூஸிலாந்து ஏ அணியைத் தோற்கடித்த இந்திய ஏ அணி!

இந்தியா ஏ அணியைச் சேர்ந்த 20 வயது அன்மோல்ப்ரீத் சிங்கும் சித்தார்த் கெளலும்...

எழில்

இந்தியா ஏ அணியைச் சேர்ந்த 20 வயது அன்மோல்ப்ரீத் சிங்கும் சித்தார்த் கெளலும் சிறப்பாகப் பங்களித்து 3-0 என நியூஸிலாந்து ஏ அணியைத் தோற்கடிக்க உதவியுள்ளார்கள்.

நியூஸிலாந்தின் மவுண்ட் மெளங்கனியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் 20 வயது அன்மோல்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 39, பாவ்னே 48, விஜய் சங்கர் 42 ரன்கள் எடுத்தார்கள். 

இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி, 44.2 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சித்தார்த் கெளல், 4 விக்கெட்டுகளை எடுத்தார். 75 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது ஆட்டத்தை வென்ற இந்திய ஏ அணி, தொடரை 3-0 என வெற்றி கண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT