செய்திகள்

பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ்: உலகின் முதல்நிலை வீராங்கனை டைசூவின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பி.வி.சிந்து

DIN

சீனாவின் குவாங்ஷுவில் நடைபெற்று வரும் பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அபாரமாக ஆடி உலகின் முதல்நிலை வீராங்கனை டை சூ யிங்கின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

குரூப் ஏ மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும்-டை சூ யிங்கும் மோதினர். இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. முதல் கேமை 14-21 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து இழந்தார்.


எனினும் அடுத்த இரண்டு கேம்களில் ஆதிக்கம் செலுத்தி 21-16, 21-8 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் டைசூவின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு முன்பு இருவரும் 13 முறை மோதியதில் 6 முறை சிந்து தொடர்ந்து தோல்வியடைந்தார்.

சமீர் வர்மா அபாரம்

குரூப் பி பிரிவு ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா முதல் ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் மொமடோவிடம் தோல்வியுற்றார். 

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இந்தோனேஷிய அதிரடி வீரர் டாமி சுகிர்தோவை 21-16, 21-7 என்ற  கேம் கணக்கில் தோல்வியுறச் செய்தார். 

இதன் மூலம் தனது நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளார். 
அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்தின் வாங்சரோனை எதிர்கொள்கிறார் சமீர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு  இடங்களைப் பெறுவோர் அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT