செய்திகள்

சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானா தேர்வு: ஐசிசி அறிவிப்பு

2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானாவை தேர்வு செய்து ஐசிசி திங்கள்கிழமை அறிவித்தது.

Raghavendran

2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானாவை தேர்வு செய்து ஐசிசி திங்கள்கிழமை அறிவித்தது.

இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரர் ஸ்மிருதி மந்தானா (22), 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) திங்கள்கிழமை வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் சிறந்த ஒருநாள் வீராங்கனைக்கான ஐசிசி விருதையும் பெறுகிறார்.

2018-ஆம் ஆண்டில் மொத்தம் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 66.90 சராசரியுடன் 669 ரன்கள் குவித்துள்ளார். 25 டி20 போட்டிகளில் 130.67 ஸ்டிரைக் ரேட் உடன் 622 ரன்கள் விளாசியுள்ளார். டி20 உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் மட்டும் 125.35 ஸ்டிரைக் ரேட் உடன் 178 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் 4-ஆவது இடத்திலும், டி20 தரவரிசையில் 10-ஆவது இடத்திலும் உள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஜுலைன் கோஸ்வாமிக்கு பிறகு ஐசிசி விருதை வெல்லும் 2-ஆவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இதுகுறித்து ஸ்மிருதி மந்தானா கூறியதாவது,   

ஒரு பேட்ஸ்மேனாக ரன்கள் குவித்து அதன்மூலம் அணியை வெற்றிபெற வைப்பது தான் முக்கிய நோக்கமாக இருக்கும். அவ்வகையில், இதுபோன்ற செயல்களுக்காக அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கும்போது அவை மிகச்சிறப்பானதாக அமைகிறது. இது மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்தது மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அதுபோன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடனான போட்டிகளிலும் எனது ஆட்டம் திருப்திகரமாக அமைந்தது. 

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் நான் அதிகளவில் ரன்கள் குவிப்பதில்லை என்ற விமர்சனமும் என்மீது உண்டு. எனவே அதை சரிசெய்துகொள்ள பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதுதான் என்னை சிறந்த வீராங்கனையாக உருவாக்கியுள்ளது. அதேபோன்று டி20 உலகக் கோப்பையின் முதல் 4 ஆட்டங்களும் என்னால் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT