ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா-சீனா அணிகள் இன்று விளையாடுகின்றன. இதில் இந்தியாவின் சார்பில் அங்கிதா ரெய்னா, கர்மான் தன்டி கெளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'ஏ' பிரிவில் இந்தியாவுடன், கஜகஸ்தான், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. கடந்த 1991-க்குப் பிறகு ஃபெட் கோப்பை உலக குரூப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறாத நிலையில், பலம் வாய்ந்த அணிகளின் பிரிவில் தற்போதும் இடம்பெற்றிருப்பதால் வாய்ப்புகள் கடினமானதாகவே இருக்கும். இப்போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் அங்கிதா மற்றும் கர்மான் இருவருமே கடந்த ஆண்டு ஐடிஎஃப் சர்கியூட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முந்தையை நாள், இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனைகள் சேலையுடுத்தி ஒன்றாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். அப்புகைப்படங்களை அவர்கள் ட்விட்டரிலும் பகிர்ந்துகொண்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.