செய்திகள்

விளையாட்டு மைதானங்களுக்கான சந்தா கட்டணம் 50 சதவீதம் குறைப்பு!

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கான சந்தா கட்டண உயர்வு, வீரர்களின் எதிர்ப்பு காரணமாக 50 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 32 மாவட்டங்களிலும் விளையாட்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு அலுவலகங்களின் நிர்வாகத்தின் கீழுள்ள விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துவதற்கான சந்தா கட்டணம், கடந்த 2017 மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை செயலாண்மைக் குழுவின் ஆலோசனைப்படி உயர்த்தப்பட்டது.
சென்னை நீங்கலாக, பிற மாவட்ட விளையாட்டு மைதானங்கள் நிலை 2, 3, 4 என வரிசைப்படுத்தப்பட்டு, அந்தந்த நிலைக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் 3 முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்கள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சில மாதங்களுக்கு முன் தினமணியிலும் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை செயலாண்மைக் குழு கூட்டத்தில் சந்தா கட்டணம் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தின் முடிவில், நடைப்பயிற்சி, இறகுப்பந்து, உடற் பயிற்சி மையம் மற்றும் நீச்சல் குளங்களைப் பயன்படுத்துவதற்கான உறுப்பினர் சந்தா 2 முதல் 3 மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரமும், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT