முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தெ.ஆ. டெஸ்ட் அணி அறிவிப்பு! இரு ஆச்சர்யத் தேர்வுகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் கவனம் ஈர்த்த கிளாசென் டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகியுள்ளார். மேலும் 20 வயது முல்டரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த கிறிஸ் மோரிஸ், அன்டிலே பெலுக்வாயோ, ஆலிவிர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். முதல் டெஸ்டில் விளையாடி பிறகு காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய டேல் ஸ்டேய்னும் அணியில் இடம்பெறவில்லை.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முழுமையாகப் பங்குபெறாத அல்லது முற்றிலும் விலகிய வீரர்களான ஃபா டூ பிளெஸ்ஸிஸ், குவிண்டன் டி காக், டி வில்லியர்ஸ், டெம்பா பவுமா  ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவில் நான்கு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 1 அன்று ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடர் நான்காவது டெஸ்டுடன் ஏப்ரல் 3 அன்று நிறைவுபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி

ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹசீம் ஆம்லா, டெம்பா பவுமா, குவிண்டன் டி காக், தியுனிஸ் டி பிரைன், டி வில்லியர்ஸ், டீன் எல்கர், ஹெயின்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், மோர்னே மோர்கெல், வியான் முல்டர், லுங்கிசானி என்கிடி, வெர்னான் பிலாண்டர், ககிசோ ரபாடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.