செய்திகள்

18 பந்துகளில் அரை சதம்: புத்தாண்டு தினத்தில் அசத்திய நியூஸி. வீரர் காலின் மன்ரோ!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர் காலின் மன்ரோ 18 பந்துகளில் அரை சதம் எடுத்து அசத்தியுள்ளார்...

எழில்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர் காலின் மன்ரோ 18 பந்துகளில் அரை சதம் எடுத்து அசத்தியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் ஓவரில் 2 ரன்களுடன் கப்தில் அவுட் ஆனார். அந்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காத காலின் மன்ரோ அடுத்த ஓவரிலிருந்து தனது அதிரடியை வெளிப்படுத்தத் தொடங்கினார். 3-வது ஓவரில் 2 சிக்ஸர் அடித்த மன்ரோ, 5-வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அந்த ஓவரின் முடிவில் 18 பந்துகளில் அரை சதமெடுத்து அசத்தினார். இது ஒரு நியூஸிலாந்து வீரரின் இரண்டாவது அதிவேக அரை சதம்.  கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக 14 பந்துகளில் அரை சதம் எடுத்தார் மன்ரோ. 

வில்லியம்ஸ் வீசிய 6-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் விளாசிய மன்ரோ, அடுத்தப் பந்தில் ஆட்டமிழந்தார். 23 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பவர்பிளே முடிவில் 6 ஓவரில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 

9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது நியூஸிலாந்து.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT