மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நியூஸி. தொடக்க வீரர் காலின் மன்ரோ அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 10 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 3-வது டி20 சதமாகும். இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வீரரும் 3 சதங்களை அடித்ததில்லை. இந்த நிலையில் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் மன்ரோ. இந்த மூன்று சதங்களையும் கடந்த ஒரு வருடத்தில் அடித்துள்ளார் என்பது மற்றொரு சிறப்பம்சம்.
இதையடுத்து ஐசிசி டி20 தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி, முதலிடம் பிடித்துள்ளார் மன்ரோ. இந்தியாவின் விராட் கோலி மூன்றாம் இடத்திலும் லோகேஷ் ராகுல் 5-ம் இடத்திலும் உள்ளார்கள். ஆரோன் ஃபிஞ்ச் 2-ம் இடத்துக்கும் மே.இ. அணியின் எவின் லூயிஸ் 4-ம் இடத்துக்கும் இறங்கியுள்ளார்கள்.
இதேபோல பந்துவீச்சாளர்கள் வரிசையில் நியூஸிலாந்தின் இஷ் சோதி 9 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார். இதனால் இமாத் வாசிம், ரஷித் கான், பூம்ரா ஆகியோர் ஓர் இடம் இறங்கி 2-ம் இடம் முதல் 4-ம் இடம் வரை பிடித்துள்ளார்கள். நியூஸிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 5-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல அணிகளுக்கான டி20 தரவரிசையில் நியூஸிலாந்து அணி முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.