முகப்பு
செய்திகள்

ரபாடா: உலகின் நெ.1 டெஸ்ட் பந்துவீச்சாளர்!

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைத் தாண்டி முதலிடம் பெற்றுள்ளார். அடுத்த நான்கு இடங்களில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

கேப்டவுன் டெஸ்டில் ரபாடா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைத் தாண்டி முதலிடம் பெற்றுள்ளார். அடுத்த நான்கு இடங்களில் ஆண்டர்சன், ஜடேஜா, அஸ்வின், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் உள்ளார்கள். 

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் இரு இடங்கள் முன்னேறி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். அடுத்த மூன்று வரிசையில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், புஜாரா ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பேட்ஸ்மேன்கள்

1. ஸ்டீவ் ஸ்மித்
2. ஜோ ரூட்
3. விராட் கோலி
4. கேன் வில்லியம்சன்
5. புஜாரா

பந்துவீச்சாளர்கள்

1. ரபாடா
2. ஆண்டர்சன்
3. ஜடேஜா
4. அஸ்வின்
5. ஹேஸில்வுட் 

டெஸ்ட் தரவரிசை: அணிகள்

1. இந்தியா
2. தென் ஆப்பிரிக்கா
3. ஆஸ்திரேலியா
4. நியூஸிலாந்து
5. இங்கிலாந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.