முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஓர் ஆச்சர்யமான தேர்வு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட கேம்ரூன் ஒயிட்டுக்கு வாய்ப்பளித்துள்ளது ஆஸ்திரேலிய அணி... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட கேம்ரூன் ஒயிட்டுக்கு வாய்ப்பளித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்தத் தேர்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒயிட் ஆஸி. அணியில் இடம்பெறவில்லை. எனினும் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 14 முதல் ஆரம்பமாகவுள்ளது. ஸ்மித் தலைமையிலான இந்த அணியிலிருந்து மேக்ஸ்வெல், மேத்யூ வேட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். கிறிஸ் லின்னுக்குப் பதிலாக ஒயிட் அணியில் இடம்பிடித்துள்ளார்.  

முதல் ஒருநாள் போட்டியில் ஹேஸில்வுட் இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பேட் கம்மின்ஸுக்கு இரண்டாம் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்க்குக்குப் பிறகு ஓய்வளிக்கப்படவுள்ளது. மார்ச்சில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளதால் முக்கிய பந்துவீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேஸில்வுட் ஆகிய மூவரும் இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடமாட்டார்கள் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஸ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் பெயின், ஜை ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, கேம்ரூன் ஒயிட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.