செய்திகள்

ஆஸ்திரேலிய டி20 போட்டியில் அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்!

அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 போட்டி ஒன்றில் விளையாடியுள்ளார்...

எழில்

ஜனவரி 7 முதல் ஜனவரி 14 வரை ஆஸ்திரேலியாவில் டி20 போட்டி ஒன்று நடைபெறுகிறது. கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. 

கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 போட்டி ஒன்றில் விளையாடியுள்ளார்.

18 வயது அர்ஜுன், ஹாங்காங் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். பெளரலில் டான் பிராட்மேன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய அர்ஜுன், நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணியின் வலைப்பயிற்சியில் இடம்பெற்ற அர்ஜுன், இந்தப் போட்டி பற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது: பிராட்மேன் பெயர் கொண்ட மைதானத்தில் விளையாடியது மகிழ்ச்சி. ஸ்டார்க், ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களை என் ஆதர்சமாகக் கருதுகிறேன். என் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அதனால் அழுத்தம் பெறுவதில்லை. பேட்டிங் ஆடும்போது எந்தப் பந்துவீச்சாளர்களின் பந்தை அடித்து நொறுக்கவேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT