செய்திகள்

யு-19 இந்திய அணியுடன் பிறந்தநாள் கொண்டாடிய ராகுல் டிராவிட் - வைரலாகும் விடியோ

Raghavendran

உலக கிரிக்கெட்டில் அதிகம் பொற்றப்பட்ட ஜென்டில்மேன் வீரரும், இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட், தனது 44-ஆவது பிறந்தநாளை ஜனவரி 11-ந் தேதி கொண்டாடினார்.

தற்போது இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், நியூஸிலாந்தில் ஜனவரி 14-ந் தேதி தொடங்கி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து, அங்கு இந்திய அணியுடன் பயிற்சியாளர் என்ற முறையில் டிராவிட்டும் உடன் சென்றுள்ளார்.

அப்போது, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி வீரர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் துணைப் பயிற்சியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

ராகுல் டிராவிட் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஐசிசி, பிசிசிஐ மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் என்று பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13,288 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 36 சதங்கள், 63 அரைசதங்கள் அடங்கும். சராசரி 52.31, அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 270 ரன்கள் சேர்த்துள்ளார். 210 கேட்சுகள் பிடித்துள்ளார்.

அதுபோல 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்கள் சேர்த்துள்ளார். இவற்றில் 12 சதங்கள், 83 அரைசதங்கள் அடங்கும். சராசரி 39.16, அதிகபட்சமாக ஒரு போட்டியில் 153 ரன்கள் விளாசினார். 196 கேட்சுகள் பிடித்துள்ளார்.

மேலும், 298 முதல்தர போட்டிகளில் விளையாடி 68 சதங்கள், 117 அரைசதங்கள் உட்பட 23,794 ரன்கள் குவித்துள்ளார். 

ராகுல் டிராவிட்டுக்கு ட்விட்டரில் குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT