முகப்பு
செய்திகள்

ஆஷஸ் தோல்விக்கு பதிலடி: ஹாட்ரிக் வெற்றியுடன் ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

Updated On : 21 ஜனவரி, 2018 at 8:18 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:32 PM

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

இதில் முதலில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அபாரமாக அடி கோப்பையை தட்டிச் சென்றது.

இதையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில், 3-ஆவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிறிஸ் வோக்ஸ் 53* ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அபாரமாக ஆடி சதமடித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி அளித்தது. மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி வெல்வது இதுவே முதன்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.