செய்திகள்

டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டனாகும் கம்பீர்! பாண்டிங் சூசகம்

ஐபிஎல் 11-ஆவது சீசன் போட்டித் தொடருக்கான டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கம்பீர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக....

Raghavendran

ஐபிஎல் 11-ஆவது சீசன் போட்டித் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2 முறை ஐபிஎல் கோப்பை பெற்றுத்தந்த வெற்றிகரமான கேப்டனாக தில்லியைச் சேர்ந்த கௌதம் கம்பீர் உள்ளார்.

இந்நிலையில், அவரை தக்க வைக்காத கொல்கத்தா அணியில் இருந்தும் விடுவித்தது. இதையடுத்து சனிக்கிழமை நடந்த ஏலத்தில் ரூ. 2.8 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதுகுறித்து சொந்த வீடு திரும்பியதில் கம்பீர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

கௌதம் கம்பீருடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, தாய் வீடு திரும்பியதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் கம்பீரின் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. 

அவர் ஒரு வெற்றிகரமான கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் கொல்கத்தா அணி அவரை விடுவித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதுபோல கம்பீருக்கும் இது புதுமையாகவே இருக்கும். 

எனவே இந்த சீசன் முதல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கௌதம் கம்பீரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அணியில் உள்ள இளம் வீரர்களை கம்பீர் நிச்சயம் சிறந்த முறையில் வழிநடத்துவார் என்றார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மேக்ஸ்வெல், போல்ட், ரபாடா போன்ற சிறந்த வெளிநாட்டு வீரர்களும், ஷமி, அமித் மிஸ்ரா போன்ற அனுபவ இந்திய வீரர்களும், பிருத்வீ ஷா, விஜய் சங்கர் போன்ற இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT