முகப்பு
செய்திகள்

ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 10 ஜூலை, 2018 at 1:09 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை போட்டி தொடங்கிய போது ஒழுங்கீனத்துக்காக தலைமை பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபட்கை நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பெர்ணான்டோ ஹியுரோ நியமிக்கப்பட்டார். 
எனினும் உலகக்கோப்பை தோல்வியால் அவர் பதவி விலகிவிட்டார். இந்நிலையில் பார்சிலோனா அணியின் முன்னாள் பயிற்சியாளர் லுயிஸ் என்ரிக் புதிய தலைமை பயிற்சியாளராக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ருபியேல்ஸ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.