செய்திகள்

ஜூலையில் பிறந்திடு - இந்திய கேப்டன் ஆகிடு! வைரலாகும் சேவாக் ட்வீட்

ஜூலை மாதம் 9-ஆம் தேதி பிறந்த இந்திய அணியின் கேப்டன் எங்காவது தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கலாம் என்று வீரேந்திர சேவாக், திங்கள்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

Raghavendran

ஜூலை மாதம் 9-ஆம் தேதி பிறந்த இந்திய அணியின் கேப்டன் எங்காவது தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கலாம் என்று வீரேந்திர சேவாக், திங்கள்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் அடுத்தடுத்த நாட்களில் பிறந்த (ஜூலை 7) மகேந்திர சிங் தோனி, (ஜூலை 8) சௌரவ் கங்குலி ஆகியோர் இந்திய அணியின் மாபெரும் கேப்டன்களாக செயல்பட்டவர்கள். அதுபோல ஜூலை 10-ஆம் தேதியும் மற்றொரு ஜாம்பவான் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் பிறந்த தினமாகும்.

இந்நிலையில், இடையில் விடுபட்ட ஜூலை 9-ஆம் தேதியை மையப்படுத்தி விரேந்திர சேவாக், ட்வீட் செய்துள்ளார். அதிரடி பேட்டிங்குக்கு பெயர் போன சேவாக்கின் ட்வீட்களும் அதிரடியாய் அமைவது உண்டு. இதனாலேயே அவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவற்றில் சேவாக்கை பின்தொடர்பவர்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இணையாக ட்விட்டர் ரசிகர்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிறந்தநாள்களை மையப்படுத்திய அவருடைய அந்த ட்விட்டர் பதிவில், ஜூலை 7 - தோனி, ஜூலை 8 - கங்குலி, ஜூலை 9 - ?, ஜூலை 10 - சுனில் கவாஸ்கர். இதில் காணாமல் போன ஜூலை 9-ஆம் தேதியில் இந்தியாவின் வருங்கால கேப்டன் எங்காவது பிறந்திருக்கலாம் அல்லது தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கலாம். ஜூலையில் பிறந்திடு - இந்திய கேப்டன் ஆகிடு என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT