செய்திகள்

பிசிசிஐ அட்டவணை: மொத்தம் 2017 உள்நாட்டு ஆட்டங்கள்

DIN

இந்திய கிரிக்கெட்டில் வடகிழக்கு மாநில அணிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, உள்நாட்டுப் போட்டியில் நடைபெறும் ஆட்டங்களின் எண்ணிக்கை 2017-ஆக அதிகரித்துள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், உள்நாட்டுப் போட்டிகளில் புதிய சாதனையாக மொத்தம் 37 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தப் போட்டியில் ஏ', பி', சி' பிரிவுகளோடு புதிதாக பிளேட்' என்ற ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அருணாசலப் பிரதேசம், பிகார், மணிப்பூர், மேகலாயம், மிúஸாரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், உத்தரகண்ட் ஆகிய மாநில அணிகள் புதிதாக இணைந்துள்ள நிலையில், அந்த பிளேட்' பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏ' மற்றும் பி' பிரிவுகளில் தலா 9 அணிகளும், சி' பிரிவில் 10 அணிகளும் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதில் பிளேட்' பிரிவிலிருந்து முன்னேறும் 2 அணிகள், சி' பிரிவுக்கு மாற்றப்பட்டு, அந்த அணியில் இருக்கும் இரு அணிகள், ஏ' மற்றும் பி' பிரிவுகளுக்கு தலா ஒன்றாக அனுப்பப்படும்.
இந்த ஆண்டுக்கான உள்நாட்டுப் போட்டிகள் யாவும் சீனியர் மகளிர் சேலஞ்ஜர் கோப்பை போட்டியுடன் தொடங்குகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 13 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆடவருக்கான அட்டவணை துலிப் டிராபி போட்டியுடன் (ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 9) தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 19-இல் தொடங்கும் விஜய் ஹஸாரே போட்டியில் 160 ஆட்டங்களும், நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் 160 ஆட்டங்களும், சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் 140 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.
23 வயதுக்கு உள்பட்ட ஆடவர் அணி இரு ஃபார்மட்டிலுமாக மொத்தம் 302 ஆட்டங்களில் விளையாட உள்ளது. 19 வயதுக்கு உள்பட்ட அணி அதேபோல் 286 ஆட்டங்களில் ஆடவுள்ளது. சீனியர் மகளிர் அணி 295 ஆட்டங்களிலும், 23 வயதுக்கு உள்பட்ட மகளிரணி 292 ஆட்டங்களிலும் விளையாட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT