முகப்பு
செய்திகள்

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: சாஹா விலகல்! தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ப்பு!

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விக்கெட் கீப்பர் சாஹா விலகியுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:12 PM
பகிர்:

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விக்கெட் கீப்பர் சாஹா விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான்.

2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் விளையாடவிருந்தது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே வரலாற்று ரீதியிலான உறவு உள்ளதால் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்தியா முடிவெடுத்தது.

Advertisement

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 14 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் ஜுன் மாதம் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் நடந்ததில்லை.

இதற்கு முன்பு பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளன. இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மே 25 அன்று கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் பிளேஆஃப் போட்டியின்போது விக்கெட் கீப்பர் சாஹா விரலில் காயம் ஏற்பட்டது. காயம் குணமாக மேலும் ஐந்து அல்லது ஆறு வார காலம் ஆகும் என்பதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து சாஹா விலகியுள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments