முகப்பு
செய்திகள்

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: ஷமிக்குப் பதிலாக நவ்தீப் சயினி இந்திய அணியில் சேர்ப்பு!

இந்திய அணி வீரர்களுக்கு நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாததால் முகமது ஷமிக்குப் பதிலாக...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:35 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 14 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் ஜுன் மாதம் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் நடந்ததில்லை.

இதற்கு முன்பு பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளன. இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான்.

Advertisement

2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் விளையாடவிருந்தது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே வரலாற்று ரீதியிலான உறவு உள்ளதால் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்தியா முடிவெடுத்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து சாஹா காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் மற்றொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் இன்று இந்திய அணி வீரர்களுக்கு நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாததால் முகமது ஷமிக்குப் பதிலாக தில்லியைச் சேர்ந்த 25 வயது நவ்தீப் சயினி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள முத்தரப்புப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தேர்வாகியுள்ளார். இத்தகவல்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments