செய்திகள்

சாய் பயிற்சி மையங்களில் அதிரடி ஆய்வு

DIN

தரமான உணவு வழங்கப்படவில்லை என இந்திய ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் புகார் தெரிவித்ததை அடுத்து பிராந்திய பயிற்சி மையங்களில் தகுதி திறன் மதிப்பீடு மற்றும் அதிரடி ஆய்வு நடத்த சாய் திட்டமிட்டுள்ளது.
நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தேசிய பயிற்சி முகாம், பெங்களூருவின் சாய் பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வீரர்களுக்கு சுகாதார மற்ற தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என பயிற்சியாளர் ஹரேந்திர சிங் புகார் தெரிவித்திருந்தார். இது விளையாட்டு வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் கூறியதாவது:
இந்த நிலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வீரர்களுக்கு தரமான உணவு வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சமையலர், தரமான உணவு பொருள்கள், சுகாதார மேம்பாடு தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT