செய்திகள்

ரஷித் கான் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிய ஷிகர் தவன்! 87 பந்துகளில் சதம்!

எழில்

ஷிகர் தவன் பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவாரா என்கிற கேள்வி எழுந்தது உண்மை. ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்திவிட்டார். ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பலமாகக் கருதப்பட்ட பந்துவீச்சை நொறுக்கித் தள்ளி முதல் நாளின் முதல் பகுதியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சைனி, குல்தீப் யாதவ், கருண் நாயர், தாக்குர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களான விஜய், தவன், ராகுல் ஆகிய மூவருமே இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.

இந்திய அணி முதல் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஷிகர் தவன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். 119 பந்துகளில் தவன் - விஜய் ஜோடி 100 ரன்களை எட்டி இந்திய அணிக்குப் பலமான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. 

டி20 ஆட்டங்களில் ரன்கள் அதிகம் கொடுக்காமல் பந்துவீசும் ரஷித் கான், டெஸ்ட் போட்டியில் மிகவும் தடுமாறினார். முக்கியமாக ஷிகர் தவன், ரஷித் கானின் பந்துவீச்சைக் குறிவைத்துத் தாக்கினார்.

சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து வந்த ஷிகர் தவன், 87 பந்துகளில் சதத்தை எட்டினார். இதனால் முதல் நாளின் முதல் பகுதியில் உணவு இடைவேளைக்கு முன்பு சதமெடுத்த ஆறாவது வீரர், முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவன் 104, விஜய் 41 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான், 7 ஓவர்களில் 51 ரன்களை வாரிக் கொடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT